கோவில்பட்டி கோட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு
கோவில்பட்டி கோட்டத்தில் 13-ந்தேதி மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;
கோவில்பட்டி:
கோவில்பட்டி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் சகர்பான் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பொதுமக்களுக்கு தடையில்லா சீரான மின் வினியோகம் வழங்குவதற்கு ஏதுவாக, சாய்ந்த மின்கம்பங்களை நிமிர்த்தல், மின்பாதைக்கு அருகே உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல் போன்ற பணிகள் 13-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கின்றன. எனவே விஜயாபுரி துணை மின்நிலையத்தின் வடக்கு திட்டங்குளம், தெற்கு திட்டங்குளம், தொழில்பேட்டை பகுதி, பூந்தோட்ட காலனி மற்றும் பசுவந்தனை துணை மின்நிலையத்தின் தீத்தாம்பட்டி, கோவிந்தம்பட்டி, வண்டானம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இதேபோல் எட்டயபுரம் துணை மின் நிலையத்தின் கடலையூர், லிங்கம்பட்டி, பெருமாள்பட்டி, சென்னயம்பட்டி, காட்டுராமன்பட்டி ஆகிய பகுதிகளுக்கும், கழுகுமலை துணை மின்நிலையத்தின் சி.ஆர்.காலனி, கரடிகுளம் ஆகிய பகுதிகளுக்கும் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.