கழிப்பறைகள் குறித்த அறிவிப்பு பலகைகள்
பழனியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிடத்தின் அமைவிடம் குறித்து அறிய அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.
நாடு முழுவதும் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்தவகையில் பழனியில் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக நகரில் உள்ள கழிப்பிடங்களில் குறைகள் குறித்து கருத்து தெரிவிக்க 'கியூஆர்' ஒட்டப்பட்டு உள்ளது. இதில் ஸ்கேன் செய்து பதிவு செய்யும் மக்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
சுகாதார பணிகள் குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், பழனியை பொறுத்தவரை வெளியூர் மக்களே அதிகம் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் மக்களுக்கு கழிப்பிட வசதி சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது. எனினும் பலருக்கு கழிப்பிடம் இருப்பது சரிவர தெரியவில்லை. எனவே தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கழிப்பிடத்தின் அமைவிடம் குறித்து 100 மீட்டர் தூரத்தில் நான்கு திசைகளிலும் பெயர் பலகை வைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. நகரில் உள்ள 31 கழிப்பிடத்துக்கும் இதுபோன்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட உள்ளது. இதனால் வெளியூர் மக்கள் பயன்பெறுவார்கள் என்றார்