வடகிழக்கு பருவமழை விழிப்புணர்வு கூட்டம்
கலவையில் வடகிழக்கு பருவமழை விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.;
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் இந்துமதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் பருவ மழையால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், அதிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்றும், ஆடு, மாடு, கோழிகளை பருவமழையில் இருந்து எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த கூட்டம் மடப்பது குறித்து சில கிராமங்களுக்கு மட்டுமே தகவல் கிடைத்ததாகவும், அதுவும் முறையான அழைப்பு இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இக்கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள், தாலுகா அலுவலக ஊழியர்கள், காவல்துறை, கால்நடைத்துறை, தீயணைப்புத் துறை, பேரூராட்சி ஊழியர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.