வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆய்வு

விழுப்புரம் ஆயுதப்படை வளாகத்தில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. ஆய்வு செய்தார்.

Update: 2022-09-22 19:19 GMT

வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. தேன்மொழி நேற்று விழுப்புரம் வருகை தந்தார். அவர் விழுப்புரம் காகுப்பத்தில் உள்ள ஆயுதப்படை வளாகத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலாவதியான பொருட்கள் அனைத்தும் அரசுக்கு திருப்பி அனுப்பி புதியதாக பொருட்கள் வாங்குவதற்காக பழைய பொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார்களுக்கான கைப்பந்து ஆடுகளத்தை தொடங்கி வைத்தார். மேலும் செஞ்சி உட்கோட்டம் வளத்தி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 13-ந் தேதி நடந்த கொலை முயற்சி வழக்கில் சிறப்பாக புலன் விசாரணை செய்து குற்றவாளிகளை விரைந்து கைது செய்த இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்- இன்ஸ்பெக்டர்கள் கார்த்திக், விஸ்வநாதன் மற்றும் போலீசாரை ஐ.ஜி. தேன்மொழி பாராட்டி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வின்போது விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் விழுப்புரம் ஶ்ரீநாதா, கடலூர் சக்திகணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பார்த்திபன், பிரியதர்ஷினி, கனகராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன், ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்