போக்சோ சட்டத்தில் வடமாநில வாலிபர் கைது

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வடமாநில வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-07-10 20:00 GMT



கருமத்தம்பட்டி


அசாம் மாநிலத்தை சேர்ந்த குல்ஷான் அகமது (வயது 23). இவர் கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி 3 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அந்த பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியு டன் பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் அது காதலாக மாறியது. இதை அறிந்த சிறுமியின் பெற்றோர் அவரை கண்டித்து வாலிபருட னான காதலை கைவிடுமாறு அறிவுறுத்தினர். இது பற்றி சிறுமி, காதலனிடம் கூறி உள்ளார்.

சம்பவத்தன்று குல்ஷான் அகமது, ஆசைவார்த்தை கூறி சிறுமி யை சென்னைக்கு கடத்தி சென்று தனது நண்பரின் அறையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கருமத்தம் பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி சிறுமியை மீட்டனர்.விசாரணையில், குல்ஷான் அகமது, சிறுமியை கடத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதைய டுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து குல்ஷான் அகமதுவை போலீசார் கைது செய்தனர். பின்னர் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


மேலும் செய்திகள்