கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது

கஞ்சா விற்ற வடமாநில வாலிபர் கைது;

Update: 2023-10-22 19:00 GMT

பெரியநாயக்கன்பாளையம்

பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வெள்ளமடை ஊராட்சி காளிபாளையம் கிராம பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜா தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்தனர்.

அங்கு சோதனை நடத்திய போது ஆசாமி ஒருவர் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ததுதெரிய வந்தது.

அவரை மடக்கி பிடித்து விசாரித்ததில் அந்த ஆசாமி ஒடிசா மாநிலம் ஜெப ஊக்கான் பகுதியைச் சேர்ந்த ரஞ்சன் குமார் தாஸ் (வயது 41) என்பதும்,கடந்த சில மாதங்களாக இந்த தொழிலில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 1 கிலோ 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்