வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.;

Update:2023-03-05 11:15 IST

சென்னை,

தமிழ்நாட்டில் கட்டுமான தொழில் முதல் தள்ளுவண்டி கடை வியாபாரம் வரையில் பீகார், மேற்கு வங்காளம் போன்ற வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவின. வேறு சில மோதல் சம்பவங்களின் 'வீடியோ' காட்சிகளை தவறாக இணைத்து இப்படி பொய்யான தகவல் பரவியதால் வடமாநில தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். அவர்களில் பலர் தமிழ்நாட்டில் இருந்து வெளியேறவும் தொடங்கி உள்ளனர்.

இந்தநிலையில், வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வடமாநில தொழிலாளர்கள் குறித்து அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. கலகம் செய்யத்தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. வட மாநில தொழிலாளர் குறித்த பதிவிற்காக பீகார் பாஜக டுவிட்டர் பிரிவு மீதும் தமிழக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்