வேலூர் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
வேலூர் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.;
வேலூர் மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூர் மாநகராட்சியில் மழை பெய்யும்போது கொணவட்டம் திடீர்நகர், சம்பத்நகர், முள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கும். வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துவிடும். அங்கு முன்எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
இந்த நிலையில் மழைநீர் வடிந்து செல்லும் பிரதான நிக்கல்சன் கால்வாயில் தூர்வாரும் பணி தொடங்கி உள்ளது. முள்ளிப்பாளையத்தில் இருந்து கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது. பருவமழையை முன்னிட்டு இந்த பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், விரைவில் முடிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.