களியக்காவிளையில் மத சார்பற்ற ஜனதாதளம் ஆர்ப்பாட்டம்
களியக்காவிளையில் மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.;
களியக்காவிளை:
மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதை கண்டித்தும், விலைவாசி உயர்வை மாநில அரசு குறைக்க வலியுறுத்தியும் குமரி மாவட்ட மத சார்பற்ற ஜனதாதளம் சார்பில் களியக்காவிளையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மேல்புறம் வட்டார தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் எம்.இன்னாசென்ட், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில வக்கீல் பிரிவு தலைவர் அருள்தாஸ், பொதுக்குழு உறுப்பினர் ராஜசேகரன், குமரி மாவட்ட தலைவர் ஞானதாஸ் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.