இந்து அல்லாதவர்கள் பழனி கோவிலில் நுழைய விதித்த தடையை நீக்க வேண்டும் - மதுரை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை மனு

இந்து அல்லாதவர்கள் பழனி கோவிலில் நுழைய விதித்த தடையை நீக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Update: 2023-09-04 23:41 GMT


இந்து அல்லாதவர்கள் பழனி கோவிலில் நுழைய விதித்த தடையை நீக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நுழைய தடை

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் மற்றும் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட உப கோவிலுக்குள் இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடைவிதிக்க வேண்டும். அங்கு, இந்து அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பலகையை மீண்டும் வைக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை கடந்த ஜூலை மாதம் 31-ந் தேதி விசாரித்த நீதிபதி ஸ்ரீமதி, இந்துக்கள் அல்லாதவர்கள் கோவிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிட்டு இருந்தார்.

இதனையடுத்து பழனி முருகன் கோவிலில் இந்துக்கள் அல்லாதோர் கோவிலில் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை செயல் அலுவலரால் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டது.

நீக்கக்கோரி மனு

இந்த நிலையில் அந்த அறிவிப்பு பலகையை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்ற இடைக்கால உத்தரவை நீக்கி கொள்ள வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அதனை தொடர்ந்து, விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்