புதுச்சேரியில் கவர்னருக்கும் முதல்-அமைச்சருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்
புதுச்சேரியில் கவர்னருக்கும் முதல்-அமைச்சருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.;
புதுச்சேரி,
புதுச்சேரி துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது:-
புதுச்சேரியில் புதுமையான ஆட்சி நடக்கிறது. கவர்னருக்கும் முதல்-அமைச்சருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நான் யாரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கவில்லை. முதல்-அமைச்சர் ரங்கசாமி மன உளைச்சலில் இருந்தால் அதை நேரடியாக பேசி தீர்த்துவைக்க தயாராக உள்ளேன்.
அண்ணன் ரங்கசாமி ஏன் மன உளைச்சலில் இருக்கிறார் என்பதைக் கேட்டு, பிரச்னை இருந்தால் அதை அதிகாரிகளுடன் அமர்ந்து பேசி தீர்த்து வைப்பேன். நாளை அதிகாரிகளையும், முதல்-அமைச்சரையும் அழைத்து அமர்ந்து பேசி காலதாமதத்தை சரி செய்து விடுவோம்.
இது ஒரு சகோதர சகோதரிக்குள் ஏற்படுகிற பிரச்னைதான். யாரையும் மன உளைச்சலில் இருக்க வைக்கக் கூடாது என்பதுதான் என்னுடைய கொள்கை. முதல்-அமைச்சர் தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். மாநில அந்தஸ்தில் என்னென்ன நல்லது நடக்குமோ அது தற்போதும் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.