கடத்தல் விவகாரங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய எஸ்.பி-க்களின் அனுமதி தேவையில்லை - டி.ஜி.பி சைலேந்திர பாபு

கடத்தல் விவகாரங்களில் எப்.ஐ.ஆர் பதிவு செய்ய எஸ்.பி-க்களின் அனுமதி தேவையில்லை என டி.ஜி.பி சைலேந்திர பாபு கூறியுள்ளார்.;

Update: 2023-01-30 14:11 GMT

சென்னை,

கடத்தல் விவகாரங்களில் முதல் தகவல் அறிக்கை(எப்.ஐ.ஆர்) பதிவு செய்வதற்கு எஸ்.பி-க்களின் அனுமதி தேவையில்லை. இக்கட்டான சூழ்நிலைகளில் காவல்துறையே விரைந்து செயல்பட்டு நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி சைலேந்திர பாபு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், கடத்தல் விவகாரங்களில் எஸ்.பி- க்களின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலைகள் இருப்பதால் தாமதம் ஏற்படுவதாக கூறப்பட்டுவந்த நிலையில், சம்பந்தப்பட்ட காவல்துறையே துரிதமாக நடவடிக்கை எடுக்கலாம். எஸ்.பி- க்களின் அனுமதி தேவையில்லை என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்