தண்ணீாின்றி கருகும் நெற்பயிர்கள்

கோட்டூர் அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற பெரிய பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் விவசாயிகள் ஊற்றி வருகிறார்கள்.;

Update: 2023-08-09 19:00 GMT

கோட்டூர்;

கோட்டூர் அருகே தண்ணீரின்றி கருகும் நெற்பயிர்களை காப்பாற்ற பெரிய பாத்திரங்களில் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் விவசாயிகள் ஊற்றி வருகிறார்கள்.

குறுவை சாகுபடி

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே சோழங்கநல்லூர் கிராமத்தில் அடப்பாறு பாசனத்தை நம்பி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் குறுவை சாகுபடி செய்தனர். மேட்டூர் அணை தண்ணீர் திறந்து 2 மாதங்களுக்கு மேலாகியும் 3 முறை மட்டுமே வயலுக்கு தண்ணீர் பாய்ந்துள்ளது. கடந்த 20 நாட்களாக வயல்களுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

கருகும் பயிா்கள்

தற்போது ஆறுகளில் குறைந்த அளவு தண்ணீர் செல்வதால் வசதியுள்ள விவசாயிகள் மட்டும் பம்பு செட் மூலம் வயலுக்கு தண்ணீரை பாய்ச்சி வருகின்றனர். இதனால் கூடுதலாக ஒரு ஏக்கருக்கு ரூ.1500 வரை செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளதாக விவசாயிகள் கூறுகிறாா்கள். இதைப்போல அகரவயல், புழுதிக்குடி, சோமாசி, சிதம்பரகோட்டகம், ஆண்டிக்கோட்டகம் உள்பட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 2,500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் சாகுபடி செய்ய பட்ட குறுவை பயிர்கள் முற்றிலுமாக கருகி வருவதாக விவசாயிகள் கூறுகிறார்கள்.

குடங்களில்...

இந்தநிலையில் சோழங்கநல்லூர் பகுதியில் தனது விளை நிலத்தில் பெண் விவசாயி ஒருவர் பயிர்கள் கருகி வருவதால் அருகில் உள்ள வாய்க்காலில் இருந்து குடங்களில் தண்ணீர் எடுத்து அதை பெரிய பாத்திரங்களில் நிரப்பி வயல்களில் தண்ணீரை தெளித்து பயிர்களை காப்பாற்றி வருகிறார்கள்.இது குறித்து அவர் கூறியதாவது:-வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் குறைந்த அளவு ஆறுகளில் வருவதால் பம்புசெட் வைத்து வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். ஆனால் அதிக வெப்பம் காரணமாகவும், தண்ணீர் இல்லாததாலும் ஒரே வாரத்தில் காய்ந்து நெற்பயிர்கள் காய்ந்து போகும் நிலை ஏற்படுகிறது. மேலும் களை அதிகம் மண்டி காணப்படுவதால் 50 ஆட்களை கொண்டு களை எடுத்தும் பயனில்லை. வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் வருவதால் 100 லிட்டர் டீசல் செலவு செய்து பம்புசெட் மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் நிலை உள்ளது.ஆனால் அரசு டீசல் மானியம் கூட வழங்குவதில்லை. இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கும் விவசாயிகள் பம்பு செட் மூலம் தண்ணீர் பாய்ச்சாமல் குடங்கள் மூலம் தண்ணீர் எடுத்து வந்து வயல்களில் தெளித்து வருகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்