மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

அதிமுகவின் பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்வு செய்து நான் இடைக்கால பொதுச்செயலாளராக வந்துள்ளேன் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

Update: 2022-09-22 14:47 GMT

சேலம்,

சேலம், ஆட்டையாம்பட்டியில் அறிஞர் அண்ணாவின் 114வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது: அதிமுகவின் பொதுக்குழுவில் பெரும்பாலான உறுப்பினர்கள் தேர்வு செய்து நான் இடைக்கால பொதுச்செயலாளராக வந்துள்ளேன். ஸ்டாலின், தந்தை மறைவுக்கு பிறகு தலைவராகியுள்ளார்.எங்களைப் பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

அதிமுக ஆட்சியில் எண்ணற்ற பிரச்னைகளை உருவாக்கினார்கள்.எதற்கெடுத்தாலும் போராட்டம்; ஆயிரக்கணக்கான போராட்டங்களுக்கு அனுமதி கொடுத்து அத்தனையும் சமாளித்தோம்.ஆனால் இன்றைய முதல் அமைச்சரால் எதையும் சமாளிக்க முடியவில்லை. மடியில் கனமில்லை, அதனால், வழியில் பயமில்லை. எதற்கும் அதிமுக அஞ்சாது. உப்பை தின்றவர்கள் தண்னீரை குடித்தே ஆக வேண்டும் யாரும் தப்பிக்கமுடியாது

அதிமுகவை வஞ்சிக்கவோ, துன்புறுத்தவோ, நினைத்தால் மீண்டும் திரும்பி சம்பந்தப்பட்டவர்களுக்கு வரும். எதுவுமே தெரியாத பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், போட்டோ ஷூட் மட்டுமே நடத்துகிறார். குழுக்கள் மட்டுமே போடப்பட்டுள்ளன. திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை. திட்டங்களை நிறைவேற்ற 38 குழுக்கள் போட்டுள்ளனர்.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, வழிப்பறிகள் நடைபெறுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்