குழந்தை திருமணம் செய்யக்கூடாது

குழந்தை திருமணம் செய்யக்கூடாது என பள்ளி மாணவர்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Update: 2023-07-14 22:15 GMT

ஊட்டி

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயலட்சுமி மேற்பார்வையில், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, நேரு மற்றும் போலீசார் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு சென்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். டீன் ஏஜ் பருவம் என்பதால் பள்ளி மாணவ-மாணவிகளின் பல்வேறு சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

பொதுமக்களுக்கு சமூக நீதி, சமூக நல்லிணக்கம், மனித உரிமைகள், சமூக ஒற்றுமை, வன்கொடுமை தடுப்பு, போதை மற்றும் புகையிலை பொருட்கள் தடுப்பு குழந்தைகள் மற்றும் இளம் சிறார்களுக்கு எதிரான குற்றங்கள், போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் குழந்தை திருமணம் செய்யக்கூடாது. இரட்டை குவளை முறை இருந்தால் புகார் அளிக்கலாம். வகுப்பறையில் சக மாணவர்களிடம் சாதி ஏற்றத்தாழ்வு காண்பிக்கப்பட்டால் தகவல் தெரிவிக்கலாம். கஞ்சா பயன்பாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம். மேலும் போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நிவாரணத்தொகை வாங்கி தருகிறோம். நீலகிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் நிலையம் மூலம் இதுவரை 56 பேருக்கு பழங்குடியின சான்றிதழ் வாங்கி கொடுக்கப்பட்டு உள்ளது. அசாதாரணமான சூழ்நிலை ஏற்பட்டால் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் நிலையத்தை 0423-2223831 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்