குளச்சல் கடற்கரையில் மது அருந்த தடை
குளச்சல் கடற்கரையில் மது அருந்த தடை;
குளச்சல்:
குளச்சல் இயற்கை துறைமுக கடற்கரை பகுதிக்கு மாலை நேரத்தில் பொழுது போக்க ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து செல்கிறார்கள். இதற்கிடையே சிலர் கடற்கரையில் இரவு நேரத்தில் திருட்டு தனமாக மதுகுடித்து விட்டு அங்கேயே பாட்டிலை உடைத்தபடி செல்கின்றனர். உடைந்த மது பாட்டில்கள் கடற்கரைக்கு வரும் பொதுமக்களின் கால்களை பதம் பார்க்கும் சம்பவமும் நடக்கிறது.
எனவே அங்கு மது அருந்துவதை தடுக்கும் வகையில் குளச்சல் போலீஸ் நிலையம் சார்பில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதில், கடற்கரையில் மது அருந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.
விழிப்புணர்வு பலகை வைக்கும் நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி, புனித காணிக்கை அன்னை திருத்தல செயலாளர் வால்டர், இணை செயலாளர் ரெக்சன், பொருளாளர் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.