27 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை
வார்டு பிரச்சினைகள் குறித்து 27 முறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என பேரூராட்சி கூட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டது.;
நாட்டறம்பள்ளி பேரூராட்சி கூட்டம், பேரூராட்சி தலைவர் சசிகலா சூரியகுமார் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் நந்தகுமார் வரவேற்றார். இதில் வார்டு கவுன்சிலர்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
14-வது வார்டு கவுன்சிலர் இல.குருசேவ் தன்னுடைய வார்டு பகுதியில் கடந்த ஒரு வருடமாக குடிநீர், தெருவிளக்குகள், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் குறித்து 27 முறை பேரூராட்சியில் மனு கொடுத்தும் இது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என குற்றம்சாட்டி செயல் அலுவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதைத்தொடர்ந்து மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் சூரியகுமார் வார்டு கவுன்சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர் தான் அளித்த கோரிக்கைகள் குறித்து செயல் அலுவலரிடம் மீண்டும் கடிதம் கொடுத்தார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.