1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
நாகையில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படடது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளதாகவும், இதனால் சூறைக்காற்று வீசக்கூடும் என்றும், மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து நாகை துறைமுக அலுவலகத்தில் நேற்று இரவு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இதை விளக்கும் வகையில் 2 மின்விளக்குகள் பொருத்தப்பட்டது.