1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.;

Update:2022-10-23 00:15 IST

வெளிப்பாளையம்:

நாகை துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

கிழக்கு மத்திய வங்கக்கடல் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல் கூண்டு ஏற்றம்

இதன் காரணமாக நாகை துறைமுகத்தில் நேற்று 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்பட்டது. இதனால் நாகை மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்