என்.எல்.சி. அலுவலகத்தை த.வா.க.வினர் முற்றுகை
நிலம் கொடுத்தவர்களுக்கு வேலை கேட்டு என்.எல்.சி. அலுவலகத்தை த.வா.க.வினர் முற்றுகையிட்டனர்.
நெய்வேலி,
நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்துக்கு கடந்த 1989-ம் ஆண்டுக்கு முன்பு பலர் தங்களது வீடு, நிலம் கொடுத்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க மறுக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலி நிலத்துறை அலுவலகத்தை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் நேற்று முற்றுகையிட்டனர். இதற்கு கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அறிவழகன் தலைமை தாங்கினார். இதில், மாநில இளைஞரணி தலைவர் ஜோரேன்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம், மாவட்ட தலைவர் பாலமுருகன், விருத்தாசலம் தொகுதி செயலாளர் அருன்குமார், கடலூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி என்.எல்.சி. நிலத்துறை முதன்மை செயலாளர் விவேகானந்தனிடம் மனு கொடுக்கப்பட்டது.