நீலகிரி: 22 பேரை கொன்ற கும்கி யானைக்கு பணி ஒய்வு
கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் 2 கும்கி யானைகளுக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பக யானைகள் முகாமில் 2 கும்கி யானைகளுக்கு பணி ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
மூர்த்தி என்ற 60 வயதை நெருங்கும் யானையும், முதுமலை என்ற யானையும் கும்கி யானைகளாக வனத்துறையில் பணியில் இருந்தன. இந்த 2 யானைகள் மாயாற்றில் குளிக்க வைக்கப்பட்டு அலங்கரிக்க பட்டு, நெத்தி பட்டம் கட்டி முகாமுக்கு கொண்டு வரப்பட்டது.
பின்னர் இரண்டு யானைகளுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. பின்னர் இரண்டு யானைகளுக்கும் சால்வை அணிவித்த வனத்துறையினர் மரியாதை செலுத்தினர். ஓய்வு பெற்ற இரண்டு யானைகளுக்கும் இனி எந்த பணியும் வழங்கப்படாது.
இதில், மூர்த்தி என்ற யானை, கடந்த 1998ம் ஆண்டு வனப்பகுதியிலிருந்து வெளியேறி, 22 பேரை கொன்றது. இதனை பிடித்த தமிழக வனத்துறையினர் பயிற்சி அளித்து கும்கி யானையாக மாற்றியது குறிப்பிடத்தக்கது.