நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த் 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும்

Update: 2022-08-30 08:42 GMT

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;

(30.08.2022 முதல் 03.9.2022 வரை ) : தமிழ்நாடு மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த் 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவுமேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது /மிதமான மழை பெய்யக்கூடும்.

இன்று குமரிக்கடல் பகுதிகள் மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். கேரளா கடலோர பகுதிகள் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

Tags:    

மேலும் செய்திகள்