பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்
ஆலங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.;
ஆலங்குளம்:
ஆலங்குளம் அருகே நல்லூர் மேற்கு திருநெல்வேலி மேல்நிலைப் பள்ளியில் நல்லூர் பஞ்சாயத்து மற்றும் சுகாதாரத் துறை சார்பாக மாணவ- மாணவியருக்கு நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நல்லூர் பஞ்சாயத்து தலைவர் சிம்சன் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். மேலும் நிலவேம்பு குடிநீரின் பயன் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை வசந்தி ஜான்சி ராணி, நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஆசிரியர் வில்லியம் பீட்டர் ராஜ், சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் கங்காதரன் மற்றும் ராம்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.