சென்னையில் 3 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை
இந்த சோதனையில் 300 கிராம் தங்கம், ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
சென்னை,
சென்னையில் 3 இடங்களில் இன்று என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.அதன்படி பாரிமுனை, முத்தியால்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களில் கொச்சி என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் 300 கிராம் தங்கம், ரூ.37 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.