நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா

கீழப்பெரும்பள்ளம் நாகநாத சுவாமி கோவிலில் கேது பெயர்ச்சி விழா 8-ந் தேதி நடக்கிறது.;

Update:2023-10-05 00:15 IST

திருவெண்காடு:

பூம்புகார் அருகே கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் சவுந்தர நாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நவகிரகங்களில் ஒன்றான கேது பகவான் தனி சன்னதியில் கோவில் கொண்டு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவில் கேது கிரக பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. கேது பகவானை வழிபட்டால் திருமண தடை, குடும்ப செழிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு பெற்ற கேது பகவான் வருகிற 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.41 அளவில் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி சனிக்கிழமை இரவு முதல் கால யாக பூஜையும், பூர்ணாகுதியும் நடக்கிறது. ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாக பூஜையும், தீபாராதனை காண்பிகப்பட்டு, புனித நீர் அடங்கிய யாக குடங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து 16 வகையான பொருட்களால் அபிஷேகம, மலர் அலங்காரம் செய்யப்பட்டு பெயர்ச்சி தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், தக்கார் ராமு, தலைமை அர்ச்சகர் பட்டு சிவாச்சாரியார், கிராம முக்கியஸ்தர்கள், கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்