விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-10-03 18:45 GMT

மன்னார்குடி:

கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உத்தரபிரதேசம் லக்கிம்பூர் கேரியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் மீது கார் ஏற்றி படுகொலை செய்த குற்றவாளிக்கு துணை போன ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்து தண்டனை வழங்க வேண்டும்.படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு அரசு உறுதியளித்த இழப்பீடுகளை வழங்கிட வேண்டும்.44 தொழிலாளர் நல சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நேற்று மன்னார்குடி தேரடியில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் ராவணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் கலியபெருமாள், இளைஞர் மன்ற மாவட்ட செயலாளர் துரை அருள்ராஜன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நிர்வாகிகள் சுப்பிரமணியன், திருஞானம், கலைச்செல்வன், ரகுபதி, முத்துகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்