புத்தாண்டு சிறப்பு வழிபாடு: குலசை முத்தாரம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம்...!

ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2023-01-01 08:15 GMT

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு பால்குட அபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக இன்று காலை 6-மணிககு மஹாகணபதி ஹோமம், மஹாலெட்சுமி ஹோமம், காலை 6.20 மணிக்கு தனபூஜை, கோபூஜை, கஜபூஜை, காலை 6.30 மணிக்கு 108 கலகபூஜை, உலக நன்மை வேண்டிய மஹாதீபாராதனை, காலை 6.45 மணிக்கு சிதம்பரேஸ்வரருக்கு மகாதீபாராதனை, காலை 7 மணிக்கு கடற்கரை சிதம்பரேஸ்வரர் ஆலயத்திலிருந்து முத்தாரம்மனுக்கு சீர்வரிசை எடுத்து வருதல், காலை 8.10 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு மகாதீபாராதனை, காலை 8.30 மணிக்கு அறம் வளர்த்த நாயகி அம்மன் ஆலயத்திலிருந்து கோலாட்டம், யானை ஊர்வலத்துடன், மேளதாளம் முழங்க 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.

நண்பகல் 12.20 மணிககு விவசாயம் தழைக்க, மழைவேண்டி 1008பால்குட அபிஷேகம்,12:30 மணிக்கு சிறப்புமகா அன்னதானம், 108 கலசாபிஷேகம், 108 சங்காபிஷேகமும் நடைபெற்றது.108 சுமங்கலி பெண்கள் குலவையிட கும்மி, மாலை 5.10 மணிக்கு அம்பாள் ஊஞ்சல் சேவை, மாலை 6மணிக்கு 1008 மஹா திருவிளக்கு பூஜை வழிபாடு, இரவு 8.10மணிக்கு முத்தாரம்மன் ஆனந்தமாக திருத்தேரில் பவனியும், இரவு 8.30 மணிக்கு ஸ்ரீபைரவருக்கு வடைமாலை அணிந்து சிறப்பு பூஜையும் நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்