திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிய வாகனங்கள்
திடக்கழிவு மேலாண்மை பணிக்கு புதிய வாகனங்கள் வாங்கப்பட்டது.;
காரைக்குடி
காரைக்குடி நகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக 15-வது மத்திய நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் 13 வாகனங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி முதற்கட்டமாக 7 வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் செயல்பாட்டினை காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துத்துரை கொடியசைத்தது தொடங்கி வைத்தார். அப்போது ஆணையாளர் வீர முத்துக்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.