புதிய மின்மாற்றிகள்
திருநகரி, திருவாலியில் ரூ.10 லட்சத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன.;
திருவெண்காடு அருகே திருவாலி மற்றும் திருநகரி ஆகிய கிராமங்களில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் மின்வாரியம் சார்பில் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டன. இதற்கான தொடக்க நிகழ்ச்சி திருநகரி கிராமத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு சீர்காழி உபகோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை தாங்கினார். சீர்காழி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பஞ்சுகுமார் முன்னிலை வகித்தார். திருவெண்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் வரவேற்றார். இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தரராஜன், தாமரை செல்வி திருமாறன், கவுன்சிலர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து திருவாலியில் புதிய மின்மாற்றியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. இயக்கி வைத்தார்.