ரூ.9.35 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைப்பு

கடையம் அருகே ரூ.9.35 லட்சத்தில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு தொடக்க விழா நடந்தது.

Update: 2023-09-01 18:45 GMT

கடையம்:

கடையம் ஒன்றியம் ரவணசமுத்திரம் பஞ்சாயத்து சின்ன தெரு, கிட்டகல் தெருவில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. இந்நிலையில் போதிய மின் அழுத்தம் இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதுதொடர்பாக பஞ்சாயத்து தலைவர் முகம்மது உசேன், மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்ததையடுத்து புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.9.35 மதிப்பில் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டு புதிய மின்கம்பங்கள் மூலம் ரவணசமுத்திரம் பகுதிக்கு இணைப்பு வழங்கப்பட்டது.

பொதுமக்கள் புதிய மின்மாற்றிக்கு மாலை அணிவித்து பூஜை செய்தனர். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் முகம்மது உசேன், மின்வாரிய கல்லிடைக்குறிச்சி கோட்ட பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் ராமகிளி, உதவி பொறியாளர்கள் ஜீவானந்தம், விஜயராஜ், ரவணசமுத்திரம் ஜமாத் தலைவர் சாகுல் ஹமீது, செயலாளர் செய்யது அப்பா, தாஜிதின், ரிபாய், பஞ்சாயத்து துணைத் தலைவர் ராம லட்சுமி, ஊராட்சி உறுப்பினர்கள் கோமதி, மொன்னா முகமது, முகம்மது யஹ்யா, மெஹருண் நிஷா, ஜானகிராமன், கனகா, முகைதீன் அப்துல் காதர், ஜமீலா ஹாத்தூன், சமூக ஆர்வலர் நாகூர் மீரான் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்