ரூ.5 லட்சத்தில் புதிய கலையரங்கம்; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

ஆலங்குளம் அருகே ரூ.5 லட்சத்தில் புதிய கலையரங்கத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-10-01 20:11 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி ஆலங்குளம் ஒன்றியம் தாளை சுப்பிரமணியபுரம் கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் மதிப்பீட்டில் கலையரங்கம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் தலைமை தாங்கி திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் குத்தரபாஞ்சான் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயராணி குமார், துணைத்தலைவர் சுப்புராஜ், வார்டு உறுப்பினர் பார்வதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்