ரூ.3.73 கோடியில் புதிய தொழில்நுட்ப மையம்; அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்

தூத்துக்குடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்ப மையம் கட்டப்படுவதற்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

Update: 2022-08-13 17:27 GMT

தூத்துக்குடியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில் நுட்ப மையம் கட்டப்படுவதற்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.

தொழில்நுட்ப மையம்

தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.3.73 கோடி மதிப்பில் புதிதாக தொழில்நுட்ப மையம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று அரசு தொழிற் பயிற்சி மைய வளாகத்தில் நடந்தது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். சண்முகையா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட உள்ள தொழில் நுட்ப மையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அலுவலர் அறைகள்

இதில் தரை தளத்தில் இ.வி. எந்திரம், சி.என்.சி எந்திரம், பிளம்பிங் எந்திரம் உள்பட 8 வகையான எந்திரங்களுக்கு பணிமனை மற்றும் அலுவலர் அறைகள் அமைக்கப்பட உள்ளது. மேலும் வகுப்பறைகள், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சுகாதார வளாக வசதிகள் உள்பட பல வசதிகள் அமைக்கப்பட உள்ளது.

விழாவில் உதவி கலெக்டர் சிவசுப்பிரமணியன், தாசில்தார் செல்வக்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தேவி, உதவி செயற்பொறியாளர் வெள்ளைச்சாமி, தூத்துக்குடி அரசு தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குனர் மற்றும் முதல்வர் வேல்முருகன், மாவட்ட திறன் பயிற்சி மைய உதவி இயக்குனர் ஏஞ்சல் விஜய நிர்மலா மற்றும் நிலைய அலுவலர்கள், பயிற்சியாளர்கள் உள்்பட பலர் கலந்து கொண்டனர்.

கால்நடை மருத்துவமனை

ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்து கிராமத்தில் ரூ.48 லட்சம் செலவில் கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கினார். ஓட்டப்பிடாரம் எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ முன்னிலை வகித்தார். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு கால்நடை மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

முன்னதாக ஓசநூத்து கிராமத்தில் விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்ட இலவச ஆடுகள் பராமரிப்பு மற்றும் வளர்ப்பு குறித்து பயனாளிகளிடம் அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் கேட்டறிந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்