சென்னையில் வாகனங்களுக்கான புதிய வேக வரம்பு நிர்ணயம்

சென்னையில் குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வாகனங்களும் 30 கிலோமீட்டர் வேகத்திற்குள்தான் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-11-01 15:02 GMT

சென்னை,

சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வாகனங்களுக்கான புதிய வேக வரம்பை அறிவித்திருக்கிறது. இந்த புதிய வேக வரம்பு வருகிற 4-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. கடந்த 2003-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பு தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மறுமதிப்பீடு செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் இலகுரக வாகனங்களுக்கு அதிகபட்ச வேகமாக 60 கிலோமீட்டர் வேகம் நியமிக்கப்பட்டுள்ளது. கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச வேகமாக 50 கிலோமீட்டர் வேகம் நியமிக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களுக்கு அதிகபட்ச வேகமாக 40 கிலோமீட்டர் வேகம் நியமிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்பு பகுதிகளுக்குள் அனைத்து வாகனங்களும் அதிகபட்சமாக 30 கிலோமீட்டர் வேகத்திற்குள்தான் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு மீறி சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்