புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்

சேண்டாக்கோட்டை ஊராட்சிக்கு புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என பாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2022-10-18 20:11 GMT

கரம்பயம்;

சேண்டாக்கோட்டை ஊராட்சிக்கு புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேதமடைந்த ரேஷன் கடை

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சேண்டாக்கோட்டை ஊராட்சியில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் தற்பொழுது ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த ரேஷன் கடையில் தான் சேண்டாக்கோட்டையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ரேஷன் பொருட்களை வாங்குகிறார்கள். இந்த ரேஷன் கடை கட்டிடம் சேதமடைந்து உள்ளது.

மழைநீர்

இந்த கட்டிடத்தின் உள்ளே அடுக்கி வைக்கப்பட்டுள்ள அரிசி மூட்டைகளில் மழை காலங்களில் மழைநீர் ஒழுகி அரிசி, சீனி உள்ளிட்ட பொருட்கள் நனைந்து ஈரமாகிறது. இதனால் கடைக்கு வரும் பொருட்களை சுய உதவி குழு கட்டிடத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளதாகவும் தொடர்ந்து மழை பெய்வதால் ரேஷன் பொருட்களை பாதுகாக்கம் வகையில் சேண்டாக்கோட்டையில் புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்