ரூ.8 லட்சத்தில் புதிய ரேஷன் கடை திறப்பு
ரூ.8 லட்சத்தில் புதிய ரேஷன் கடையை அப்துல் வகாப் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
நெல்லை மாநகராட்சி பாளையங்கோட்டை மண்டலத்துக்குட்பட்ட 37-வது வார்டு பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 லட்சத்தில் இருந்து புதிய ரேஷன் கடை கட்டப்பட்டது.
அதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமை தாங்கினார். மண்டல தலைவர் பிரான்சிஸ் முன்னிலை வகித்தார். அப்துல்வகாப் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய ரேஷன் கடையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் ஜெகநாதன், பவுல்ராஜ், தி.மு.க. துணை செயலாளர் மூளிகுளம் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.