ரூ.7 லட்சத்தில் புதிய ரேஷன் கடை; சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்

திசையன்விளை அருகே அந்தோணியார்புரத்தில் ரூ.7 லட்சத்தில் புதிய ரேஷன் கடையை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

Update: 2023-05-01 19:51 GMT

திசையன்விளை:

திசையன்விளை அருகே குமாரபுரம் பஞ்சாயத்து அந்தோணியார்புரத்தில் ரூ.7 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, புதிய ரேஷன் கடையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினார்.

ராதாபுரம் யூனியன் துணைத்தலைவர் இளையபெருமாள் முன்னிலை வகித்தார். குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ் வரவேற்று பேசினார்.

கூட்டுறவு துணை பதிவாளர் தினேஷ், குமாரபுரம் பஞ்சாயத்து துணைத்தலைவர் ஆனிஷா பயாஸ், லயன்ஸ் பள்ளி தாளாளர் சுயம்புராஜன், மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்