கீழகூத்தங்குடியில், ரூ.8 லட்சத்தில் புதிய ரேஷன் கடை

கீழகூத்தங்குடியில், ரூ.8 லட்சத்தில் புதிய ரேஷன் கடை

Update: 2023-04-28 18:45 GMT

திருவாரூர் அருகே கூடூர் ஊராட்சியில் கீழகூத்தங்குடி, அன்னுக்குடி ஆகிய கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தபகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்க 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கூடூருக்கு தான் செல்ல வேண்டும். இதனால் இந்த பகுதியில் ரேஷன் கடை அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கடந்த 2014-15-ம் ஆண்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தனது சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் நீண்ட காலமாக திறக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் நேற்று இந்த கட்டிடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திறக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மண்டல இணை பதிவாளர் சித்ரா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா முன்னிலை வகித்தார். இதில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு ரேஷன் கடை கட்டிடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கருணாகரன், மாங்குடி கூட்டுறவு சங்க தலைவர் மணிகண்டன், ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி குமார், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்