ரூ.25 லட்சம் செலவில் புதிய ரேஷன் கடை- கலையரங்கம்; முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்

கோவில்பட்டி அருகே ரூ.25 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்ட புதிய ரேஷன் கடை- கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ திறந்து வைத்தார்.

Update: 2023-03-18 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே காளாம்பட்டி பஞ்சாயத்து அழகப்பபுரம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.10.80 லட்சம் மதிப்பில் கலையரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. கலையரங்கத்தை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதேபோல் குமரெட்டியாபுரம் பஞ்சாயத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.14 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையையும் அவர் திறந்து வைத்து பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கினார்.

நிகழ்ச்சிகளில் பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் சத்யா, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் காளிப்பாண்டியன், ஒன்றிய மாணவரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர இளைஞரணி செயலாளர் கருப்பசாமி, நகராட்சி கவுன்சிலர் கவியரசு, முன்னாள் ஒன்றிய செயலாளர் போடுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்