இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகள் : முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்
புதிய திட்டப் பணிகளை காணொலி வாயிலாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை,
சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிய திட்டப் பணிகளை காணொலி வாயிலாக இன்று முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ரூ .43.68 கோடி மதிப்பில் கோவில்களில் திருமண மண்டபம், வைணவ பிரபந்த பாடசாலை உள்ளிட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்
மேலும் ரூ 9.67 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடம், வணிக வளாகம், முடிகாணிக்கை மண்டபம் உள்ளிட்ட முடிவுற்ற பணிகளை மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்