'தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்' என்ற புதிய கட்சி- பழ.கருப்பையா தொடங்குகிறார்

புதிய கட்சியான தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் இன்றைய அரசியல் சூழலில் காலத்தின் ஒரு கட்டாயமாக உருவெடுத்திருக்கிறது என்று பழ கருப்பையா தெரிவித்தார்.

Update: 2023-02-03 16:19 GMT

சென்னை,

பழம்பெரும் அரசியல்வாதி மற்றும் இலக்கியவாதியாக தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் பிரபலமான பழ. கருப்பையா "தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்" என்ற பெயரில் ஒரு புதிய கட்சியை தொடங்குகிறார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய கட்சியான தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம் இன்றைய அரசியல் சூழலில் காலத்தின் ஒரு கட்டாயமாக உருவெடுத்திருக்கிறது. நேர்மை, எளிமை, செம்மை. அறம் சார்ந்த அரசியல். முக்கியக் கொள்கை என்பதே இக்கழகத்தின் முதல் கொள்கை.

சந்தைப்படுத்தப்பட்ட அரசியலை சமூகம் சார்ந்ததாக மாற்றுவது எமது முக்கிய கொள்கை. அரசியல் என்பது ஒரு வணிகமாக ஆகிவிட்ட நிலையை மாற்றி அமைப்பதற்கான முயற்சி இது. இதற்காக நாங்கள் சில ஆயிரம் பேர் இணைந்து ஒரு கட்சியை தொடங்க இருக்கின்றோம்.

ராயப்பேட்டை சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை எமது கழகத்தின் தொண்டர்களுடைய மாநாடு நடக்க இருக்கிறது. அந்த மாநாடு தொண்டர்களுக்கு மட்டுமே உரிய மாநாடு. ஏற்கனவே 3, 4 நாட்களாக எமது கழகத்தில் சேர்கின்ற மற்றும் அந்த நிகழ்வின்போது சேர இருக்கின்றவர்களுக்காக இந்த மாநாட்டை நாங்கள் நடத்த இருக்கின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்