ரூ.20 லட்சத்தில் புதிய ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடம்; மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

முதலியார்பட்டியில் ரூ.20 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.;

Update: 2023-06-30 18:45 GMT

கடையம்:

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

இதனை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதலியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் அ.முகைதீன்பீவி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்