புதிய கட்டிடம் கட்டும் பணி

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.3¾ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

Update: 2022-10-25 19:00 GMT


திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.3¾ கோடியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை கலெக்டர் காயத்ரிகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

கட்டுமான பணிகள்

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பில் புதிய அலுவலகம் கட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது

திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.3 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் 17,323 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் அனைத்து வசதிகளுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய அலுவலகம் கட்டப்பட்டுவருகிறது. இந்த பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ரேஷன் கடையில் ஆய்வு

அதனைத்தொடர்ந்து, திருவாரூர் தெற்குவீதியில் திருவாரூர் மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலை ரேஷன் கடையில் எடை எந்திரம் சரியாக இயங்குகிறதா என்பதையும், குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாக உள்ளதா என்பதையும், மக்களுக்கு முறையாக அரிசி, பாமாயில், கோதுமை. சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் சென்றடைகிறதா என்பதையும் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது உதவி கலெக்டர் (பொறுப்பு) பாலசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பாஸ்கரன், தாசில்தார் நக்கீரன் ஆகியோர் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்