2023-24 கல்வியாண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டம் - அமைச்சர் பொன்முடி அறிக்கை

அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-07-25 16:57 GMT

சென்னை,

இது குறித்து அமைச்சர் பொன்முடி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த, மாதிரி பாடத்திட்டம் பல்கலைக்கழகம் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை தமிழ் நாடுஅரசு மதித்து அங்கீகரிக்கிறது. மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படுவதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் நலனை மேம்படுத்துவதாகும். பாடப்பிரிவுகளுக்கு டையே 75% இணைத்தன்மை இல்லாத காரணத்தால் பணி ஆணைப் பெற்றும் பணியில் சேர முடியாமல் சிரமப்படும்.

மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களுக்கிடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையிலும் இந்த, மாதிரி பாடத்திட்டம் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. 2018 - 2019க்குப் பின், சில உயர்கல்வி நிறுவனங்களில் பாடத்திட்டம் மறுசீரமைக்கப்படவில்லை. இதை ஈடுசெய்யும் வகையில் இந்த, மாதிரிப் பாடத்திட்டம் (2023-2024) மிகத் தரமாக மறுசீரமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நலன் கருதி உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் உயரிய நோக்கம் ஊடகங்கள் மற்றும் கல்வியாளர்களிடையே சரியாக சென்றடையும் பொருட்டு இந்த விளக்கம் வெளியிடப்படுகிறது.

உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க. 30-9-2021, 1-14-2021 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு அரசு உயர்கல்வித்துறை வழங்கிய அறிவுறுத்தலின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற சட்டம் 1992. பிரிவு 10 (2) விதியின்படியும், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட முயற்சியால் ஐ.ஐ.டி. அண்ணா பல்கலைக்கழகம், 10 கலை அறிவியல் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்ஜூரிகள் மற்றும் இதர கல்லூரிகளிலிருந்தும் 9:22 பேராசிரியர்களைப் பாடத்திட்டக்குழு உறுப்பினர்களாகக் கொண்டு 870 பாடத்திட்டக்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு, தொழில் துறையினரின் ஆலோசனைகள் பெறப்பட்டு மிகத்தரமான முறையில் 301 மாதிரி பாடங்கள் (166 இளநிலை பாடங்கள், 135 முதுநிலை பாடங்கள்) மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு அரசின் "நான் முதல்வன்" மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்களில் தெரிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தொழில் முனைவு மற்றும் திறன்மேம்பாட்டு அம்சங்கள் மாணவர்களுக்கு மிகவும் பயன்படும் வகையில் இம்மாதிரிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் தயாரித்த மாதிரி பாடத்திட்டங்களைப், பல்கலைக்கழக பாடத்திட்டக்குழுக்களின் ஒப்புதலுடன் நடைமுறைப்படுத்துமாறு தன்னாட்சி கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இணைவு பெற்ற கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் அணுப்பிவைத்தன. இதன் அடிப்படையில், 90 சதவித உயர்கல்வி நிறுவனங்கள் மாதிரிப் பாடத்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளன. இளநிலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் கீழ்க்காணும் ஐந்து பிரிவுகள் இடம் பெற்றுள்ளன.

பகுதி | மொழி, பகுதி ॥ ஆங்கிலம், பகுதி ॥ முக்கியப் பாடங்கள் மற்றும் விருப்பப்பாடங்கள். பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி கல்லூரிகள் தங்கள் தேவைக்கேற்ப தாங்கள் விரும்பும் பாடங்களைப் பாடத்திட்டமாக வைத்துக்கொள்ளலாம். பாடங்களுக்கிடையே இணைத்தன்மை இருப்பதற்காக இப்பாடத்திட்டத்தில் பகுதி ॥ ஆல் உள்ள முக்கிய பாடங்கள் (0 எ) 75 சதவிதம் மட்டும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கருத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எதிரான கருத்து இந்த மாதிரி பாடத்திட்டத்தில் இல்லை. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமையை மதிக்கும் நோக்கத்தில் மாதிரி பாடத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிநிலையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை போன்றவற்றில் ஆசிரியர்களுக்கு உதவும் வகையில் மாதிரி பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாதிரி பாடத்திட்டம் தன்னாட்சிக்கு பாதகமில்லாமல் உருவாக்கப்பட்டு, அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களுடன் நடத்தப்பட்ட இரு கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்