'தடைகளை தாண்டி.. வளர்ச்சியை நோக்கி' பட்ஜெட்டுக்கு முத்திரைச் சின்னம் வெளியீடு

தமிழக சட்டசபையில் நாளை 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.;

Update: 2024-02-18 12:35 GMT

சென்னை,

சட்டசபையில் நாளை 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. நிதி அமைச்சராக பதவி ஏற்ற பிறகு தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த நிலையில், பட்ஜெட்டுக்கு புதிய முத்திரை சின்னம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

""தடைகளைத் தாண்டி... வளர்ச்சியை நோக்கி" என்ற கருப்பொருள், இந்த புதிய முத்திரை சின்னத்தில் இடம்பெற்றுள்ளது. பட்ஜெட்டுக்காக புதிய முத்திரை சின்னம் வெளியிடுவது இதுவே முதல் முறையாகும்.

Tags:    

மேலும் செய்திகள்