புதிய மின் கம்பங்கள் அமைக்கப்பட்டது
திருவெண்காடு பகுதியில் புதிய மின்கம்பங்கள் அமைத்து கொடுத்த மின்வாரியத்தினருக்கு அப்பகுதி பொது மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.
திருவெண்காடு:
திருவெண்காடு பகுதியில் புதிய மின்கம்பங்கள் அமைத்து கொடுத்த மின்வாரியத்தினருக்கு அப்பகுதி பொது மக்கள் பாராட்டு மற்றும் நன்றி தெரிவித்தனர்.
சேதமடைந்த மின்கம்பங்கள்
திருவெண்காடு அருகே உள்ள நாங்கூர், திருவாலி, சின்ன பெருந்தோட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள சில மின்கம்பங்கள் சேதமடைந்து இருந்தது.
எனவே அந்த சேதமடைந்த மின்கம்பங்களை அகற்றிவிட்டு, அதற்கு பதிலாக புதிய மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாலி ஊராட்சி மன்ற தலைவர் தாமரை செல்வி மற்றும் அந்த பகுதி மக்கள் திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தனர்.
மின்வாரியத்தினர் நடவடிக்கை
இதையடுத்து திருவெண்காடு மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில், மின்வாரிய ஆக்க முகவர் குணசேகரன், மின் பாதை ஆய்வாளர்கள் ராஜேந்திரன், தாஸ் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் மேற்கண்ட பகுதியில் புதிதாக 10 மின்கம்பங்களை அமைத்தனர்.
மேலும் கீழ சட்டநாதபுரம் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக தொங்கிய நிலையில் காணப்பட்ட மின் கம்பிகளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், தங்கள் கோரிக்கையை ஏற்று சேதமடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக புதிய மின்கம்பங்கள் அமைத்து தந்த மின்வாரியத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.