புதிய கல்விக் கொள்கையால் உயர் கல்விக்கு நிறைய வாய்ப்பு - நிர்மலா சீதாராமன்
இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் & உற்பத்தி நிறுவனத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்;
காஞ்சிபுரம்,
இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் & உற்பத்தி நிறுவனத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துகொண்டார்.பின்னர் பேசிய அவர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது ;
உற்பத்தி நிறுவனங்களின் தேசமாக இந்தியா மாற வேண்டும்.தொழில் நிறுவனங்களின் தேவை என்ன என்பதை அறிந்து அதற்கேற்ப மாணவர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.அவர்களுக்கு பெற்றோர் உறுதுணையாக இருக்கவேண்டும்.இந்தியா வளர்ச்சியை நோக்கி சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது;2028ல் சீனாவை விட, இந்தியாவில் உழைக்கும் வர்க்கத்தினர் அதிகம் இருப்பார்கள் என ஐ.நா.வின் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
புதிய கல்விக் கொள்கையால் உயர் கல்விக்கு நிறைய வாய்ப்பு கொடுத்துள்ளது..உலகம் எங்கு நகர்கிறது,எந்த தொழில்நுட்ப்பம் நோக்கி நகர்கிறது என்பதை பெற்றோர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.கல்விக்காக தங்களின் வருமானத்தில் ஒருபகுதியை சேமிப்புக்காக பெற்றோர்கள் சேமிக்க வேண்டும்.இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் 65% பேர் உழைக்கும் வர்க்கத்தினராக இருந்தால், தேசத்தின் வளர்ச்சி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.என தெரிவித்துள்ளார்