ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறப்பு
ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் திறக்கப்பட்டது.
கடையம்:
கடையம் யூனியன் துப்பாக்குடி பஞ்சாயத்து துப்பாக்குடியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்து பேசினார்.
விழாவில் ஓ.பன்னீர்செல்வம் அணி அமைப்பு செயலாளர் எஸ்.ராதா, மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ராஜவேல், பஞ்சாயத்து தலைவர் செண்பகவல்லி ஜெகநாதன், ஒன்றிய கவுன்சிலர் இசக்கியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.