ரூ.85.44 லட்சத்தில் புதிய வகுப்பறைகள்; ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
சங்கரன்கோவில் அரசு பள்ளியில் ரூ.85.44 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கு ராஜா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.83.44 லட்சம் செலவில் புதிதாக 4 வகுப்பறைகள் மட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சி நடந்தது நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ஜான் ஆசீர் ஒன்றிய செயலாளர் பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட ஆதி திராவிடர் அணி அமைப்பாளர் மாரியப்பன், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் பிச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்துகொண்டு புதிய வகுப்பறைகள் கட்டும் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் திருவேங்கடம் பேரூர் கழகச் செயலாளர் மாரிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் முருகராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு மணி, கணேஷ், நகரத் துணைச் செயலாளர்கள் முத்துக்குமார், சுப்புத்தாய், பள்ளி மேலாண்மை குழு துணைதலைவர் கலைச்செல்வி, தி.மு.க. வார்டு செயலாளர் வீராசாமி, மாணவர் அணி வீரமணி, ஒப்பந்ததாரர் ஜலால், விக்னேஷ், மாவட்ட ஆதி திராவிட நலக்குழு உறுப்பினர் சங்கர், ஜான் ஜெயக்குமார், பிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.