ரூ.97 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம்; எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்
நெல்லை மாநகராட்சி பள்ளியில் ரூ.97 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய வகுப்பறை கட்டிடத்துக்கு அப்துல் வகாப் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
நெல்லை வண்ணார்பேட்டை மாநகராட்சி புதிய நடுநிலைப்பள்ளியில் பழமையான கட்டிடம் இடித்து அப்புறப்படுத்தப்பட்டது. தொடர்ந்து அங்கு புதிய கட்டிடம் கட்டுவதவற்கு நெல்லை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி ரூ.97 லட்சத்தில் புதிய வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை, அலுவலக அறை, சமையல்கூடம், கழிப்பிடம் ஆகியவை அடங்கிய கட்டிடம் கட்டும் பணி நேற்று தொடங்கியது.
அப்துல் வகாப் எம்.எல்.ஏ. தலைைம தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தச்சநல்லூர் மண்டல தலைவர் ரேவதி பிரபு, தலைமை ஆசிரியை கஸ்தூரிபாய், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் எஸ்.வி.சுரேஷ், இந்து மக்கள் கட்சி உடையார், காங்கிரஸ் தனசிங் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.