புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்; எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

விளாத்திகுளம் அருகே புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

Update: 2023-09-23 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் ஊராட்சி ஒன்றியம் சிவலார்பட்டி ஊராட்சி சுப்பலாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் குழந்தை நேயப்பள்ளி உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.28.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய 2 வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜாமணி தலைமை தாங்கினார். புதூர் தி.மு.க மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய வகுப்பறை கட்டிடங்களை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் முருகேஸ்வரி, பஞ்சாயத்து தலைவர் சக்திவேல், யூனியன் கவுன்சிலர் சுமதி இமானுவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதூர் யூனியன் அலுவலகத்தில் 17 கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை பாரத இயக்கம் மூலமாக திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகளுக்கு ரூ.42.50 லட்சம் மதிப்பீட்டில் பேட்டரி ஆட்டோவை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் புதூர் யூனியன் தலைவர் சுசீலா தளஞ்செயன், பேரூராட்சி தலைவர் வனிதா அழகுராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து சிவலார்பட்டி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் பஞ்சாயத்து அலுவலக கட்டிடம், மணியக்காரன்பட்டி ஊராட்சி தவசிங்கபுரம் கிராமத்தில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி சமையலறை கட்டிடம் ஆகியவற்றை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம் அருகே வெம்பூர் கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.57 லட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டிடத்தை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி பரமசிவன், விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தி.மு.க செயலாளர் ராமசுப்பு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் துரைப்பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதனை தொடர்ந்து முத்தலாபுரம் பஞ்சாயத்து கருப்பசாமி கோவில்பட்டி கிராமத்தில் ரூ.12.30 லட்சத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம், ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டிடத்தையும் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியை ஜெயந்தி, புதூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி, மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் ஞானகுருசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழக்கரந்தை ஆதிதிராவிடர் காலணியில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 5.5 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற்கூடத்தையும், தேவன்பட்டி கிராமத்திற்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 20.10 லட்சம் மதிப்பீட்டில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க கட்டிடத்தையும் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்